சமைப்பதெல்லாம் சமையல் ஆகிவிடாது. உணவில் சரியான அளவில் பொருட்களைச் சேர்த்துச் சமைத்தாலும் ருசி வந்துவிடாது. பக்குவமும் கைமணமும் சரியாக இருந்தால் மட்டுமே என்றென்றும் மனதில் நிற்கும் சமையல் சித்திக்கும்.
திருச்சி அருகே எண்பதுகளில் வசந்தி அக்கா இட்லிக்கடை வைத்து இருந்தார். காலை நான்கு மணிக்கு மூன்றாவது ஷிஃப்ட் ஊழியர்கள் டூல்ஸ் கம்பெனி வேலைக்குச் செல்வார்கள். அவர்களுக்காக இரண்டு மணிக்கே இட்லி சுடும் வேலையைத் தொடங்குவார் வசந்தி அக்கா.
வீட்டில் உறவுகளில் நடக்கும் நல்லது கெட்டது என எதற்கும் கடைக்கு விடுமுறை விட்டதில்லை.
‘‘விடியற்காலை நாலு மணிக்கு வேற யாரு கடை திறந்து வைப்பாங்க..? நான் ஒரு நாள் கடை மூடிட்டனா நம்பி வர்றவங்க ஏமாந்துபோயிடுவாங்க. டீயைக் குடிச்சுட்டு வேலைக்குப் போயிடுவாங்க.