மருத்துவம் மகத்தான தொழில் என்பது போலவே மிகவும் சவால் நிறைந்த துறையும் ஆகும். அதனால்தான், உயிர்காக்கும்/கொடுக்கும் ஒவ்வொரு மருத்துவர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறுவார்கள்.
அப்படிபட்ட மருத்துவர்களின் அதிலும் குறிப்பாகப் பெண் மருத்துவர்களின் வாழ்வையும், அதில் அவர்கள் சந்தித்த சோதனைகளையும், அதைத் தாண்டி அவர்கள் செய்த சாதனைகளையும் பற்றி "வெளித்தெரியா வேர்கள்" என்ற தலைப்பில் ஆசிரியர் டாக்டர் சசித்ரா தாமோதரன் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
”இந்தப் புத்தகத்திற்கு நீங்கள்தான் முன்னுரை எழுத வேண்டும்..” என்று அவர் என்னிடம் கேட்டபோது, அதற்கு சம்மதித்து அந்த புத்தகத்தை முழுவதும் படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது..