கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. ஒரு ஊருக்குச் செல்லும்போது இங்கு என்ன கோயில் இருக்கின்றது என்று தரிசித்து விட்டுச் செல்வதுதான் நம்முடைய மரபாக இருந்து வருகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள் எனும் இந்நூலானது திரு. ந. பரணிகுமார் அவர்களால் தினகரன் ஆன்மிக மலரில் எழுதப்பட்ட கோயில்களின் தொகுப்பாகும்.
சமூகத்தில் ஆலயங்களின் பங்கு மகத்தானது. அது ஆயிரமாயிரம் ஆண்டு மரபுகளின் புதையல்களையும், கலாச்சாரங்களையும் தன்னிடத்தே கொண்டது. அதற்கு அப்பாலும் அங்குள்ள மூர்த்தங்களில் பொங்கும் சாந்நித்திய பலமானது தனி மனித வாழ்வையே மாற்றுகின்றது..