அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் எனும் இந்நூலானது ஆன்மிகம் பலனில் தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்களின் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும்போது அவரால் அருளப்பட்டதே இந்த விஷ்ணு சகஸ்ரநாமம். இதிலுள்ள ஒவ்வொரு நாமமும் மிகப்பெரிய பலன்களை தரக்கூடியது.
அனுதினமும் இந்தத் திருநாமங்களை படிக்கப்படிக்க திருமாலின் பேரருள் நம்மீது பொழியத் தொடங்கும். இந்த நூலின் ஆசிரியர் திருக்குடந்தை உ.வே.வேங்கடேஷ் அவர்கள் திருநாமத்தின் நேரடியான பொருளை மட்டும் சொல்லாமல் பல்வேறு புராண உபகதைகளை விளக்கி இன்னும் ஆழம் காட்டுகின்றார்..